நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கார்கள்.. சிக்கிய 8 பேர் நிலை?

Update: 2025-12-20 09:19 GMT

ஊத்தங்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து - 8 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்...

பாப்பனூர் கூட்ரோட்டில் பெங்களூரில் இருந்து மருவத்தூர் சென்ற காரும், கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது

இதில், பெங்களூருவை சேர்ந்த நிக்கில் குமார், கீதா, ரேகா சிங்க், லட்சுமி மற்றும் பெங்களூரு கஸ்பா பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்,

உஜ்பல், ஹர்ஷிதா மற்றும் விஜயலட்சுமி என்ற 2 கார்களில் பயணித்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்கள் ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்