Family Scam || ``அடடா இதுவல்லவோ Family’' - ஊரை ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம் சிக்கியது

Update: 2025-06-27 08:58 GMT

நாகையில், ரியல் எஸ்டேட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி 22 லட்சம் பணம், 34 சவரன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி, மகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கீழ்வேளூரை சேர்ந்த திவ்யா, அவ‌ரது கணவன் பூபதி மற்றும் மகன் அபிஷேக் ஆகியோர் தனது உறவினர்களுடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, 4 பேரிடம் மொத்தம் 22 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 34 சவரன் நகைகளை பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், மேலும் சம்பந்தப்பட்டவர்களையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்