Womens Day Celebration விழாவால் பயங்கரம் - பைக்கில் செல்லும் போது அறுந்த Police SI கழுத்து

Update: 2025-03-09 04:58 GMT

உதகையில் மகளிர் தின இரவு கொண்டாட்டத்திற்காக பிரதான சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க கட்டப்பட்ட கம்பி மற்றும் நைலான் கயிறு கழுத்தை அறுத்ததில் காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இரவு நேரத்தில் கமர்சியல் சாலையில் மகளிர் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, சாலையின் குறுக்கே கம்பி மற்றும் நைலான் கயிறு கட்டப்பட்டு, பந்தல் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது, அதிகாலையில் அந்த வழியாக பைக்கில் சென்ற கூலித்தொழிலாளியும், அவரை தொடர்ந்து சென்ற உதவி ஆய்வாளரும் கம்பி தாக்கி கழுத்தில் அறுபட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தனர். விசாரணையில் அனுமதி பெறாமல் பந்தல் ஒப்பந்ததாரர் கம்பி கட்டியது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்