பெண்ணை மரத்தில் கட்டி ஆடையை அவிழ்த்து மானபங்கம் - கடலூரில் கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ
பெண்ணை மரத்தில் கட்டி ஆடையை அவிழ்த்து மானபங்கம் - மூவர் மீது வழக்கு
பண்ருட்டி அருகே இட பிரச்சினை தகராறில் பெண்ணை மரத்தில் கட்டி, ஆடையை அவிழ்த்து மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும், அவரது உறவினரான அனுராதா, ஜெயந்தி, ஜெயப்பிரதா ஆகியோருக்கும் இடையே இட பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பெண்கள் மூன்று பேரும் சேர்ந்து செல்வராணியை மரத்தில் கட்டி ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர். இது குறித்து செல்வராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.