மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி..? கம்பேக் கொடுக்கும் இயக்குநர் சசிகுமார்
சுப்பிரமணியபுரம்னு ஒரு கல்ட் கிளாசிக் படத்தை கொடுத்து சினிமா உலகையே வியக்க வச்சவரு சசிகுமார்.
தொடர்ந்து ஈசன் படத்தை இயக்குன சசிகுமார், அதுக்கப்புறம் நடிப்புல மட்டும் கவனம் செலுத்திட்டு வராரு. இருந்தாலும், நீங்க எப்பதான் இயக்குநர் ஆகப்போறீங்கனு இன்னமும் போற இடத்துலலாம் சசிகுமார்கிட்ட கேட்டுட்டு வராங்க..
சமீபத்துல நேர்காணல்ல பேசுன சசிகுமார்கிட்ட, 2010 டைம்ல ஒரு வரலாற்று கதைய படமாக்க முயன்றது பத்தி கேள்வி கேட்ருக்காங்க..
அதுக்கு சூர்யா, விஜய்கிட்ட இந்த கதையை சொன்னதாவும், புலி நடிச்சநாள விஜய் அப்போதைக்கு வேணாம்னு சொன்னதாவும் சசிகுமார் சொன்னாரு.
அந்த கதை ரெடியாதான் இருக்குனு சொன்ன சசிகுமார், கதைக்கு ஏத்த ஹீரோ கிடைச்சா கண்டிப்பா உருவாக்கிடுவேனு CONFIDENT-ஆ சொன்னாரு...
இது இல்லாம இன்னொரு PERIOD கதையை ரெடி பண்ணிட்டதாவும், அடுத்த வருசம் ஜனவரியில் ஷூட்டிங் போகபோறதாவும் சசிகுமார் சொல்லியிருக்காரு.
இந்த கதையில தானும் ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கபோறதாவும் சசிகுமார் சொல்லியிருக்காரு.