பெண்கள், குழந்தைகளை துரத்தும் காட்டு யானைகள்.. பீதியில் மக்கள்

Update: 2025-07-27 12:58 GMT

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் - விரட்ட கோரி மக்கள் சாலை மறியல்

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளை விரட்ட கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு தேவைக்காக காட்டு யானைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலையில் நடமாடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பலாப்பழம் உண்பதற்காக ஆம்பலமூலா , சேமூண்டி பகுதியில் சுற்றிய யானைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை துரத்தியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பலமுறை புகாரளித்தும் வனத்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காட்டு யானைகளை உடனடியாக விரட்டுவதுடன், யானைகளால் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்