Chennai | தனி அறையில் பூட்டப்பட்ட கணவன்.. இன்னொரு அறையில் தாழிட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்ற மனைவி
கணவரை பூட்டி சிறை வைத்து தனி அறையில் தாழிட்டுக் கொண்ட மனைவி
சென்னை அடுத்த திருமுல்லைவாயலில், பூட்டிய அறைக்குள் சிக்கிக் கொண்ட கணவன், மனைவியை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி விவேகானந்தனை, முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிய அவரது மனைவி, கீழ் தளத்தில் உள்ள அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வீரர்கள், கதவை உடைத்து இருவரையும் மீட்டனர்.