Chennai Bihar Family Murder | Bihar family killing shakes Tamil Nadu – EPS, Kanimozhi strongly condemn
சென்னை தரமணியில் பீகார் குடும்பத்தினர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அரங்கேறியுள்ள இந்த கொலைகள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்ற துயரங்கள் இனி நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல உச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகவும், இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.