காய்கறி வெட்டும் கத்தியால் கணவன் கழுத்தை அறுத்தே கொன்ற மனைவி -நடுங்க விடும் பின்னணி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினந்தோறும் தகராறு செய்த கணவனை, மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்த விநாயகம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த ஆறு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சித்தாள் வேலைக்கு செல்லும் தனது மனைவி விஜயாவிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, மனைவி விஜயா, காய்கறி வெட்டும் கத்தியால் கணவன் விநாயகத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
காவல்துறை எண் நூறுக்கு தானே போன் செய்து, போலீசாரிடம் சரணடைந்தார். இதனையடுத்து விஜயா கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.