தமிழகம் முழுக்க பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

Update: 2025-12-06 09:07 GMT

தமிழகம் முழுக்க பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

பள்ளிகளுக்கு சிறப்பு பேச்சாளர்களை அழைக்கும் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வழங்கியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக யாரையும் அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள இயக்குனர் கண்ணப்பன்,சிறப்பு அழைப்பாளர்களின் பின்னணியை அலசி ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அதனை மீண்டும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்