கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணான வைஷ்ணவி தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளம் மூலமாகவும் பிரபலமடைந்த இவரை, நாளடைவில் கட்சியினர் ஓரம் கட்டுவதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 3 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகுவதாக வைஷ்ணவி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, அவருக்கு பாஜக மற்றும் திமுகவில் இணைய அழைப்புகள் விடுக்கப்பட்டது. இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய வைஷ்ணவி, பாஜகவின் மற்றொரு திரையாக தமிழக வெற்றி கழகம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.