சாலையில் பாகிஸ்தான் கொடி... பார்த்ததும் இந்திய இளைஞர் செய்த காரியம் - வைரல் வீடியோ
பஹல்காம் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் நந்தியாலா பகுதியில் ராஷ்டிரிய தர்ம ரக்ஷாதல் அமைப்பினர் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை சாலையில் ஒட்டி அந்த நாட்டிற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து சென்றனர். இந்த நிலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்கள் சாலையில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் தேசிய கொடிகளை அப்புறப்படுத்தி சாலையோரம் வீசி சென்றனர் சிலவற்றை கையில் எடுத்து சென்றனர். இது தொடர்பாக அப்குதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நந்தியாலா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.