`என்ன ஒரு புத்திசாலித்தனம்..' - செல்போன் என நினைத்து Paytm மெஷின் திருட்டு..

Update: 2025-04-17 09:46 GMT

உதகையிலுள்ள பிரபல உணவகத்தில், விலை உயர்ந்த செல்போன் என நினைத்து Paytm மிஷினை ஒருவர் திருடிச் சென்றுள்ளார். உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட நபர் ஒருவர், சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கேயே நின்றுக்கொண்டிருந்தார். மேசையில் இருந்த Paytm மிஷினை நைசாக எடுத்த அவர், செல்போன் என நினைத்து அதனை திருடிச்சென்றார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்