``தனியார் வானிலையாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது'' பாலச்சந்திரன்
கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், வானிலை தொடர்பாக அறிவியல் பூர்வமான தகவலை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும், குறுகிய கால கணிப்புகளை தனியார் ஆய்வாளர்கள் வழங்கலாம் எனவும், ஆனால் நீண்ட கால கணிப்புகள் அறிவியல் பூர்வமாக வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த மத்திய அரசு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.