"பிரைவேட் வேலையில் நாள் முழுக்க நிக்கிறோம்"-குரூப் 4 எழுத முடியாமல் கதறும் பெண்கள்
"பிரைவேட் வேலையில் நாள் முழுக்க நிக்கிறோம்
நாயா வேலை பாக்குறோம்... முட்டி மோதி முன்னேறலாம்னு பாத்தா" - குரூப் 4 எழுத முடியாமல் கதறும் பெண்
திருநெல்வேலியில் TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவதற்கு தாமதமாக வந்ததாக கூறி, இளம்பெண்ணை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, அவர் பள்ளி கதவின் மீது சாய்ந்து அழுத சம்பவம் நடந்துள்ளது.
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் குரூப் 4 தேர்வு மையத்தில் 500 மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், 79 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இதனிடையே, இளம்பெண் ஒருவரை தாமதமாக வந்ததாக கூறி, அதிகாரிகள் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அப்பெண், பள்ளியின் வெளியே நீண்ட நேரமாக அழுது புலம்பியபடி நின்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.