முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள ஷட்டர் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துக்கொண்டு சுரங்க வாய்க்கால் பகுதியிலுள்ள ஷட்டரை திறந்து வைத்தார். தொடர்ந்து அதிகாரிகள் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.