Virudhunagar Incident | மாமியாரை கிணற்றில் வீசிய மருமகன் | தவித்த மூதாட்டி | வெளியான காரணம்
குடும்ப தகராறில் மாமியாரை கிணற்றில் வீசிய மருமகன் - பத்திரமாக மீட்பு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மருமகன் கிணற்றில் தள்ளி விட்ட மாமியாரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது குழந்தையை ஒப்படைக்குமாறு 70 வயதான மாமியார் இருளாயி உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, மாமியாரை 50 அடி ஆழமான கிணற்றில் தூக்கி வீசி விட்டு தப்பியோடியுள்ளார். தண்ணீரில் தத்தளித்த மூதாட்டியை, திருச்சுழி தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.