Fight | Death | மாடு கட்டுவதில் வந்த சண்டை.. அடித்தே கொல்லப்பட்ட மாணவன்..

Update: 2026-01-21 06:04 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் 12-ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொலை செய்ததாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்தபோது, அவருக்கும் சுப்பிரமணி மனைவி பூபதிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையறிந்த சுப்பிரமணி, அவரது மகன் அஜய் பூபதி ஆகியோர் தடியால் தாக்கியதில் விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில், சுப்பிரமணி, அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான சந்தோஷ் மற்றும் பூபதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்