Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21.01.2026) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2026-01-21 05:49 GMT
  • சென்னை வந்துள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், இன்று தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... தேமுதிக முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது....
  • அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் திமுக-வில் இணைந்துள்ளார்..... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தம்மை திமுக-வில் இணைத்துக்கொண்டார்...
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆம் நாளில் மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டது.... மறைந்த ஏ.வி.எம். சரவணன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலியும் செலுத்திய பின்னர், பேரவை ஒத்திவைக்கப்பட்டது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரத்து 800 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது...... ஒரு கிராம் தன்க்கம் 14 ஆயிரத்து 250 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
  • சபரிமலை தங்கக் கொள்ளை தொடர்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றுள்ளது.... சென்னையில் நடைபெற்ற சோதனையில் முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்