Thanjavur | Farmers | "பிப்.10 வரைக்கும் தண்ணீர் விடணும்.. இல்லனா.." - வேதனையில் விவசாயிகள் கோரிக்கை
சம்பா-தாளடி நெல் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால், மேட்டூர் அணையில் பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா-தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வரும் 28-ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட உள்ள சூழலில், பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.