கையில் குச்சியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய விசிக தொண்டர் வைரல் வீடியோ
திருச்சி விசிக பேரணி- 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல். விசிக சார்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தால் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கையில் குச்சியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட விசிக தொண்டரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதசார்பின்மையை பாதுகாப்போம் என்ற மையக்கருத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி மாநகரில் நடைபெற்ற பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வாகனங்கள் மூலம் விசிகவினர் திருச்சிக்கு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.