Vinayagar Chadurthi | அத்தி மரத்தால் ஆன 32 அடி விநாயகர்மக்கள் கோலாகல ஊர்வலம்
நாகையில் அத்தி மரத்தால் ஆன 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் 108 தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது சிலம்பாட்டம், கரகாட்டம், பட்டாம்பூச்சி ஆட்டம் என கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. இறுதியாக, விஸ்வரூப விநாயகர் சிலையானது நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு, கடலில் கரைக்கப்பட உள்ளது.