பழுதடைந்த இலவச பேருந்தை இறங்கி தள்ளிய பெண்கள் வைரலாகும் வீடியோ

Update: 2025-05-22 09:04 GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு இலவச பேருந்தில் பயணித்த பெண்கள், அந்த பேருந்து பழுதடைந்ததால் தாங்களே இறங்கி தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகாவில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் விஜயபுரா மாவட்டத்தின் ஒசப்பேட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிக்கு சென்ற பெண்கள் குழு ஒன்று இலவச பேருந்தில் சென்றது. அந்த பேருந்து நடுவழியில் பழுதடைந்ததால், அதில் பயணித்த பெண்களே இறங்கி தள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்