வேங்கைவயல் விவகாரத்தில் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை கொண்டு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க காவல்துறை முயற்சிப்பதாக, வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மோகன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் வழக்கில் தொடக்கத்தில் இருந்தே புலன் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்றும், திட்டமிட்டு திசைதிருப்பப் பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.