வேங்கைவயல் விவகாரம் - அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-03-28 01:58 GMT

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில் எப்படி அசுத்தம் செய்வார்கள் என்று கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம் என்று வாதிட்டார். இதையடுத்து, காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்