வேங்கை வயல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முரளி ராஜாவின் பாட்டி இறந்ததைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கட்சியினரை போலீசார் சோதனை செய்த பிறகு ஊருக்குள் அனுமதித்தனர். 2 ஆண்டுகளாக வேங்கை வயலுக்குள் வெளி ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இறப்புக்காக மட்டும் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் பகலவன், உள்ளிட்ட 50 பேர் அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதியுடன் சென்றனர்.