வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த் மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்பு வழங்கினார்.
அதில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே என்றும், காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.