Vels University | வேல்ஸ் சட்டக் கல்லூரி 10ம் ஆண்டு நிறைவு விழா - நீதிபதிகள் சிறப்புரை
வேல்ஸ் சட்டக் கல்லூரி 10ம் ஆண்டு நிறைவு விழா - நீதிபதிகள் சிறப்புரை
சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வேல்ஸ் சட்டக் கல்லூரியின் 10ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.கோட்டீஸ்வர் சிங், ஆர். மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், ஜி. கே. இளந்திரையன், பாரத சக்கரவர்த்தி, ஆர். கலைமதி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் முதல்வர் டாக்டர் ஐஷரி கணேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.