9ம் வகுப்பு மாணவிக்கு தலையில் வெட்டிய சித்தப்பா | Vellore News | Vellore News Today

Update: 2025-03-05 03:35 GMT

9ம் வகுப்பு மாணவிக்கு தலையில் வெட்டிய சித்தப்பா - வேலூரில் திடுக்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சொத்து தகராறில் அண்ணன் மகளின் தலையில் கத்தியால் வெட்டிய சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். ஓங்குப்பம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவரின் 9-ஆம் வகுப்பு படிக்கும் மகளை, சிறுமியின் சித்தப்பா சுரேஷும், அவருடைய மனைவி மேகலாவும் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது. அப்போது, சுரேஷ் வெட்டியதில் தலையில் காயமடைந்த சிறுமி, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார், சித்தப்பா சுரேஷை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்