Nellai Kavin Case Update | வேகமெடுக்கும் கவின் கொலை வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2026-01-22 05:21 GMT

கவின் கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவுநெல்லையில் கவின் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து தாக்கல் செய்ய, அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கவின் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணன், உறவினரான ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 பேரும் தங்கள் மீதான கொலை வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் முடிவில், கவின் குடும்பத்தினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்