Vellore | ``ஊசி போட்ட சில நிமிடங்களில் இளைஞர் மயங்கி விழுந்து மரணம்?’’ - வேலூரில் பரபரப்பு
தவறான ஊசியால் இளைஞர் பலி?- மருந்துக் கடை முற்றுகை
வேலூர் மாவட்டம் ஓ.ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் தவறான ஊசி போட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மருந்து கடையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 27 வயதான சீனிவாசன் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக, அப்பகுதியில் இருந்த மருந்து கடையில் ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
சில நிமிடத்திலேயே மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.