Thiruvannamalai | பெற்றோர்களே உஷார்.. விளையாடும்போது துடிதுடித்து இறந்த குழந்தை
ஆரணி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான இளவரசன்–பவானி தம்பதியரின் இளைய மகன் சஞ்ஜிவ்மித்ரன், இரவு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையை காணாமல் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடியுள்ளனர். தண்ணீர் தொட்டியை பார்த்த போது, குழந்தை அதனுள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.