Protest | "மாதம் ரூ.7,000 தான் சம்பளம்.." - விடாமல் போராடிய சிறப்பாசிரியர்கள்.. குவிந்த போலீஸ்
பணி நிரந்தரம் கோரி சிறப்பாசிரியர்கள் போராட்டம்
மனநலம், உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடம் எடுக்கக்கூடிய சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னை டிபிஐ வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மாதம் 7,000 ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்படுகிறது என்றும், முதலமைச்சர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.