TN Public Health Department | தமிழகத்தில் சிக்குன்குனியா - பறந்த முக்கிய உத்தரவு
சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு
தமிழகத்தில் சிக்கன் குனியா காய்ச்சல் அதிகரிப்பதைத் தடுக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு, பரிசோதனைகளை தீவிரப்படுத்தும்படி கூறியுள்ளார். மேலும்,
காய்ச்சல், இருமல், தூக்கமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.