கோலாகலமாக நடைபெற்ற வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் - மனமுருகி அரோகரா கோஷமிட்ட பக்தர்கள்
பிரசித்தி பெற்ற திருச்சி குமாரவயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சை யாக நடைபெற்றது. வயலூரில் முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 5 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.