திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 125 ஆவது கிளை திறந்து வைக்கப்பட்டது. திருப்பூரில் ஏற்கனவே உள்ள கிளை 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், தற்போது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. புதிய கிளையை வசந்த் அன் கோவின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் மற்றும் இரட்டை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.