வேன், கார் அடுத்தடுத்து மோதல் - 14 பேர் காயம்
நெல்லை அருகே வேன் கார் உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தமன் களம் பகுதியில் மின்வாரிய பணிகளின் காரணமாக, சாலைகளில் பேரிகாடுகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேன் ஒன்றை திடீரென நிறுத்தியதால், பின்னால் வந்த கார் மற்றும் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், திருமண வீட்டை சேர்ந்த 10 பேரும், கோயில் சென்று திரும்பிய 4 பேரும் காயமடைந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.