நாடு முழுவதும் நடந்த UPSC முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. அதில், இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு, பெரியார் ராமசாமி என்ற பெயருடன் நாயக்கர் என சாதி பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.
சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாட்கள் வைத்து கொள்ளலாம், நீதிமன்றத்திற்கு ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத்துடன், சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்ட UPSC முதல்நிலை தேர்வு மையத்தில், வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியில் மட்டுமே ஒட்டப்பட்டு இருந்ததால் தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.