சேலம் கொல்லப்பட்டியில் நடைபெற்ற ஊரக வேலைத் திட்டத்தின் தணிக்கை கூட்டத்தில், தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனக்கூறி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகள் ரகசியகமாக தீர்மானம் நிறைவேற்றுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அங்கு சென்ற தவெக-வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து தவெக-வினரை தனியறைக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.