அஜித்குமார் வழக்கில் எதிர்பாரா திருப்பம்.. அப்ரூவராக மாறும் வேன் டிரைவர்?

Update: 2025-08-03 14:36 GMT

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் வேன் டிரைவர் ராமச்சந்திரன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடப்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தரின் தங்க நகை திருடு போன வழக்கில் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமார் கொலை சம்பந்தமாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த் ஆகிய 5 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், குற்றப்பிரிவு போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஜூலை 12 முதல் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிபிஐ விசாரணையின் போது ஜுன் 27 மற்றும் 28ம் தேதி அஜித் குமாரை எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து டிரைவர் ராமச்சந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து சென்று காட்டிய நிலையில் வழக்கில் வேன் டிலைவர் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அப்ரூவராக மாற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்