Theni Court News | சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய அங்கிளுக்கு 3 ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற இளைஞர் கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்