காலையில் கேட்ட பெண்கள்.. மாலையில் வீட்டிற்கே சென்று கொடுத்த DyCM

Update: 2025-03-07 07:24 GMT

திருவாரூரில், பட்டா வேண்டி காலையில் மனு கொடுத்த பெண்களின் வீட்டிற்கு, மாலையே நேரில் சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழவனக்குடி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் சிலர் வீட்டுமனை பட்டா கோரி துணை முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று பட்டாக்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்