Udhayanidhi Stalin | Anbumani Speech | உதயநிதி பாணியிலே உதயநிதிக்கு அன்புமணி அட்டாக்

Update: 2025-09-11 05:14 GMT

கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு, கடந்த 2011-ல் திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய செங்கல்லை கண்டுபிடித்து விட்டதாக கூறிய அன்புமணி ராமதாஸ், இன்னும் மருத்துவக் கல்லூரி கட்டாமல் உள்ளதாக விமர்சித்தார். ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பயணத்தின் ஒருபகுதியாக கடலூரில் உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார். அப்போது, கடந்த தேர்தல்களில் கூட்டணி வைத்ததால் தான், திமுக வெற்றி பெற்றதாக கூறிய அன்புமணி ராமதாஸ், வரும் தேர்தலில் திமுக தனியாக போட்டியிட தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்