முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் உதயநிதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - குப்பநத்தம் கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு செங்கம் நகரில் செண்டை மேளம், நாதஸ்வரம், கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செங்கம் - குப்பநத்தம் கூட்டுச்சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலையை அவர் திறந்து வைத்தார். அப்போது, செங்கம் பகுதியில் வேடியப்பன் காவல் தெய்வமாக காப்பதுபோல், கருணாநிதி பேனா புத்தகத்தை வைத்து தமிழகத்தை காக்கிறார் என்று தெரிவித்தார்.