killing || ரிஜிஸ்டர் ஆபீஸ் பக்கத்திலே கொன்று புதைக்கப்பட்ட 2 இளைஞர்கள் - காவல் நிலையத்தில் அதிர்ச்சி

Update: 2025-06-26 06:58 GMT

நண்பர்களால் கொலை செய்யப்பபட்ட இளைஞர்கள் - காவல் நிலையம் முற்றுகை

ஊத்துக்கோட்டை அருகே சகநண்பர்களால் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் உறவினர்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன், ஆகாஷ், ஆகிய இரு இளைஞர்கள் கடந்த வாரம் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக சகநண்பர்களால் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் நண்பர்களான காமேஷ்,மணி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் நல்லபாண்டி என்பவர் ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே கைது செய்யப்பட்ட காமேஷ் மணி ஆகியோரின் வாக்குமூலம் அடிப்படையில் ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலக பின்புறத்தில் உள்ள இடத்தில் ஜானகிராமன், ஆகாஷ் ஆகிய இருவரையும் கொலை செய்து புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் புதைத்த இடத்தில் சடலத்தை தோண்டும் பணி சிறிது நேரத்தில் தொடங்கப்பட இருக்கும் நிலையில்

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஊத்துக்கோட்டை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளைஞர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உறவினர்கள் ஊர் மக்கள் குவிந்துள்ளனர் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்