அனுமதியின்றி துப்பாக்கி - கவுன்சிலர் உட்பட இருவர் கைது

Update: 2025-05-27 02:45 GMT

அனுமதியின்றி துப்பாக்கி - திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்திருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் நகராட்சி 6-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ள பாபு, அவரது தந்தை உள்ளிட்டோரை அடையாளம் தெரியாத நால்வர் மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, ஆறு பேரை கைது செய்தனர். இந்நிலையில், அரக்கோணம் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பாபு, தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு பைக், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் நான்கு தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்