வேகமாக மோதிய லாரி - பறந்து விழுந்து ஸ்பாட்டிலேயே 2 பேர் பலி

Update: 2025-09-15 06:56 GMT

காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது மணல் லாரி மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்கள் மூவருடன் பைக்கில் வந்துள்ளார். அதே பகுதியில், வெங்கடேசன் என்பவரும் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து வேகமாக வந்த மணல் லாரி இரு பைக்குகள் மீதும் மோதியதில், ஹரிஷ் மற்றும் நிர்மல் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்ற இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்