கொள்ளை சம்பவம் - 11 பேர் கைது - 6 சவரன் நகைகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நடந்த இரு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவரங்குறிச்சியை அடுத்து உள்ள தளவாய்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மற்றும் அவரது மனைவியை கட்டி போட்டு 4 பேர் கொண்ட கும்பல், 6 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல் மணியங்குறிச்சி களத்து வீட்டில் வசித்து வரும் அமரஜோதியை கட்டி போட்டு 5 பேர் கொண்ட கும்பல், 9 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இரு சம்பவங்கள் தொடர்பாக 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து,
ஆறரை சவரன் தங்க நகைகள், 25000 ரொக்கப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.