TVK Vijay News | Vijay | தவெக தலைவர் விஜய் இல்லத்தில் நுழைந்த மர்ம நபர் விடுவிப்பு

Update: 2025-09-20 02:28 GMT

தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் நுழைந்த மர்ம நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், வழக்குப்பதிவு செய்யாமல் அவரை போலீசார் விடுவித்தனர். விஜய்யின் இல்லத்தில் இரவில் நுழைந்த மர்ம நபரை, காலையில் மாடிக்குச் சென்றபோது பார்த்து விஜய் அதிர்ச்சி அடைந்தார். கட்டியணைப்பதற்கு ஓடி வந்த அந்த நபரை, விஜய் அமைதிப்படுத்தி, வீட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தார். நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம், போலீசார் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று விஜயின் மேலாளர் கேட்டுக் கொண்டதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அவரை விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்