சென்னையில் பணம், நகையுடன் கிடந்த டிராலி -போலீசுக்கு வந்த போன் கால்

Update: 2025-04-17 03:36 GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் தவறவிட்ட 2 லட்சம் பணம், தங்க நகைகள் அடங்கிய டிராலியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு, அவரிடம் ஒப்படைத்தனர். பிரகாஷ் என்பவர், திருமணத்திற்காக வாங்கிய தங்க நகைகள், புத்தாடைகள், 2 லட்சத்து 26 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை அடங்கிய டிராலியை நடைமேடையிலேயே மறந்து வைத்துவிட்டு, அஜ்மீர் விரைவு ரயிலில் ஏறியுள்ளார். டிராலியை நடைமேடையில் தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் கூறியுள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற போலீசார், அந்த டிராலியை மீட்டு, பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்